நீண்ட இழுபறி, குழப்பங்களுக்கு பிறகு பாகிஸ்தானில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (PML – N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதால் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்பும், அதிபராக ஆசிப் அலி சர்தாரியும் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பெரும் பதற்றம், அடுத்தடுத்த குண்டு வெடிப்பு மற்றும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கடந்த 8ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கையில் தொடர் இழுபறி நீடித்து வந்த […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியின் பொதுச் செயலாளர் உமர் அயூப்பை பிரதமர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த வாரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று இதற்கான முடிவுகளும் வெளியான நிலையில், இன்னும் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காமல் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்ததால், கூட்டணி ஆட்சி அமையும் என தெரியவருகிறது. இந்த தேர்தலில் நவாஸ் […]
பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமையவுள்ள நிலையில், பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்பை அவரது சகோதரர் நவாஸ் ஷெரீப் பரிந்துரை செய்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த வாரம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (சுயேட்சை), முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் […]
பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்து ஐந்து நாட்களுக்குப் பிறகும், நாட்டில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கப் போகிறது மற்றும் பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார் என்பது இன்னும் பெரிய குழப்பமாகவே உள்ளது. இப்படியான சூழலில் நான்காவது முறையாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- (நவாஸ்) கட்சியின் நிறுவனர் நவாஸ் ஷெரீப் பிரதமராவார் என அவரின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் கூறும்போது, “நான்காவது முறையாக நவாஸ் […]
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்தது. மொத்தமுள்ள 336 நாடாளுமன்ற தொகுதிகளில் 60 தொகுதி பெண்களுக்காவும், 10 தொகுதி சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டது. மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கு பொதுவான தேர்தல் நடைபெற்றது. பாகிஸ்தானில் ஆட்சியை பிடிக்க 133 இடங்கள் தேவை. இம்ரான் கானுக்கு ஜாமீன்.! பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி.? நவாஸ் செரிப் திட்டம் என்ன.? இப்படியான சூழலில் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு பெற்றவர்கள் […]
பாகிஸ்தான் நாட்டில் பல்வேறு அரசியல் மாற்றங்கள், பரபரப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது . மொத்தமுள்ள 336 நாடாளுமன்ற தொகுதிகளில் 60 தொகுதி பெண்களுக்காவும், 10 தொகுதி சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்படும். மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கு பொதுவான தேர்தல் நடைபெற்றது. இதில் நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இம்ரான் கான் பல்வேறு வழக்குக்களில் தண்டனை பெற்று சிறையில் இருப்பதால் அவரின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி சின்னம் பேட் […]
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்தது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப், ஷெபாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி, முத்தாஹிதா குவாமி இயக்கம் ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் தேர்தலை சந்தித்தனர். பாகிஸ்தானில் மொத்தமுள்ள 336 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது, இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டு […]
பாகிஸ்தான் நாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலை திரைப்படத்தை மிஞ்சும் வகையில் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறது. முன்னதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ளார். அவர் தலைவராக உள்ள தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் பேட் சின்னம் கூட தேர்தல் ஆணையத்தால் முடக்கபட்டுள்ளது. இதனால் இம்ரான் கான் வேட்பாளர்கள் பல்வேறு சின்னங்களிலும், சுயேட்சையாகவும் தேர்தலை சந்தித்தனர். முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப், ஷெபாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், […]