தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தேனி, திண்டுக்கல், நீலகிரி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஈரோட்டில் உள்ள பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெறிவித்துள்ளனர். இதனால் இன்று இரவு உபரி நீரை திறப்பதாக தெறிவத்துள்ளனர். பாவனிசாகர் அணை உபரி நீர் திறப்பதால் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 863 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கடந்த இருதினங்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 794 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஆயிரத்து 863 கனஅடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் விநாடிக்கு 150 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 51 புள்ளி பூஜ்ஜியம் 2 […]