தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் கடிதத்தில் கூறிப்பிட்டுள்ளதாவது: பெருந்தொற்று காரணத்தால் மாணவர்கள் தேர்வுகளை எதிர் கொள்வதில் சிக்கல் நேரிடும் என்று தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் நிலவுவதாகவும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த இயலாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் […]
சிக்கி தவிக்கும் 40 இந்திய தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என்று வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்ருக்கு முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்த கடிதம்: ஈரானில் சிக்கியிருக்கும் 40 இந்திய தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்ருக்கு முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். 681 இந்திய தமிழக மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுத்ததற்கு வெளியுறவுதுறை அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி நன்றியையும் உடன் தெரிவித்தார் .
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விவகாரத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் நலம் குறித்து , முதல்வர் ஏன் விசாரிக்கவில்லை என்று கட்சியினர் கேள்வி எழுப்புவதாகவும் இது அகட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனா திவீரமாக பரவி வருகிறது தொற்றுநோயை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை, முதல்வர் பழனிச்சாமி நியமித்தார். இந்தக்குழுவில், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சென்னையில் […]
ரூ.1500 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை சட்டசபையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில், தலைநகர் சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள்: சென்னை எல்லைச் சாலையின் நான்காம் பகுதியான ஸ்ரீ பெரும்புதூர் முதல் சிங்கபெருமாள் கோயில் வரை உள்ள பகுதியில் வாகன சுரங்கப்பாதைகள், சாலை சந்திப்பு மேம்பாடு, சாலை பாதுகாப்பு ஆகிய பணிகள் உலக தரத்துடன் ரூ.531 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். சிறுசேரி முதல் மகாபலிபுரம் வரையுள்ள 14.8 கி.மீ நீளச்சாலை, சேவை […]
அமமுகவில் இருப்பது தொண்டர் படை ; எடப்பாடி பழனிசாமியோடு இருப்பது வெறும் டெண்டர் படை என்று என்று தினகரன் கிண்டல் செய்து விமர்சித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் அமமுக இருக்குமா?? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பற்றி அண்ணன் பழனிச்சாமி திருவாய் மலர்ந்திருக்கிறார். அமமுகவில் இருப்பது தொண்டர் […]
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அன்மையில் அறிவித்தார் இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூரில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.அவ் விழாவில் முதலமைச்சருக்கு “காவிரி காப்பாளன்” என்ற விருதை விவசாயிகள் வழங்கி கவுரவித்தனர். பின்னர் இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பொருளாதார ரீதியில் விவசாயிகள் முன்னேற தேவைப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் அவர் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் […]