கேரளவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்:பழந்தின்னி வௌவால்களால்..! பரவவில்லை என முதற்கட்ட ஆய்வில் தகவல்..!!
கேரள மக்களை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ், பழந்தின்னி வௌவால்கள் மூலம் பரவவில்லை என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலம், மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய, மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழு, அந்தப் பகுதிகளில் முகாமிட்டு மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன. கோழிக்கோடு மாவட்டத்தில் மூசா என்பவருக்குச் சொந்தான கிணற்றில் இருந்த வௌவால்கள் மூலம்தான் நிபா வைரஸ் பரவியதாக கூறப்பட்டது. இதையடுத்து […]