பாமகவின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட். நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது. அதன்படி, நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் […]
தமிழகத்தில் உள்ள பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.17 கோடியே 18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “அண்மையில் நடைபெற்ற 2022-2023-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்களால் கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி,திருவண்ணாமலை,திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி,திண்டுக்கல்,ஈரோடு,நாமக்கல்,கோயம்புத்தூர்,நீலகிரி, சேலம் மற்றும் தருமபுரி ஆகிய 11 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்,சாலை வசதி,குடிநீர் வசதி,தடுப்பணை கட்டுதல் […]