கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிலும் தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனியில் இருந்து தங்களை காத்துக்கொள்ள சாலையில் தீ மூட்டி குளிர்காய்கின்றனர். இந்நிலையில், டெல்லியில் கடுமையான குளிர் காரணமாக நர்சரி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை என டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி இன்று தனது சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டெல்லியில் […]
பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் தேர்வுகள்நிறைவடைந்ததது. இந்த நிலையில், இன்று முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1-5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜன.5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், ஆசிரியர்களுக்கு 2-4 ஆம் தேதி வரை பயிற்சி […]
மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதிலும், குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்து வருகிறது. அங்கு கனமழை பெய்த காரணத்தால் பல இடங்களில் இன்னும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பாத காரணத்தாலும், இன்னும் அங்கு மழை தொடர்வதாலும், மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் மழை தொடர்ந்து வரும் நிலையில், நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி, வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழையும் , சில இடங்களில் மிதமான மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதுவரை சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம்,வேலூர்,கடலூர் விழுப்புரம், செங்கல்பட்டு, நீலகிரி, திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் […]
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டி தற்போது நிலை கொண்டுள்ளது.இதன் காரணமாக தமிழகத்தில் விடிய விடிய கன மழை பெய்து வருகிறது சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையையும் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல், சிவகங்கை, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 8ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை […]
நாளை அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை , திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எனப்படும் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை திருவள்ளூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரி விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் […]
திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனை அடுத்து நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. தமிழகத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என்று தெரிவித்துள்ளது. நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர […]
நெல்லை சாஃப்டர் பள்ளிக்கு நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த விஸ்வரஞ்சன், சதீஷ், அன்பழகன் ஆகிய 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், […]
இன்று காலை முதல் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக ஒரு வார காலத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளவும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். நீர் நிலைகளில் குளிக்கவோ, ஒரு செல்பி எடுக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, […]
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதால், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார். தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு […]