அரசு பள்ளிகளில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளி மேலாண்மை குழு, இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் […]
வரும் 20-ம் தேதி பெற்றோர்களுடன் பள்ளி மேலாண்மை குழு கலந்துரையாடல் நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அன்று மேலாண்மை குழு சார்ந்த கூட்டம் மட்டுமே நடைபெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஞாயிற்றுக்கிழமை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என்றும், மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல் காரணமாக 19-ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.