வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி முதல் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தற்பொழுது, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவித்தும், ஜனவரி 2ம் தேதி மீண்டும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கனமழை வெள்ளம் காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, […]
கடந்த 11-ஆம் தேதியே அரையாண்டு தேர்வு தொடங்க இருந்தது. இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதால் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வு தொடங்கியுள்ளது. மிதக்கும் எண்ணையை எடுக்க தீவிர முயற்சி… தமிழக அரசு நடவடிக்கை.! அதன்படி, இன்று தொடங்கி டிசம்பர் 22-ம் […]
2023-24ம் ஆண்டிற்கு பள்ளி மாணவர்களுக்கு காலேந்திகள் மற்றும் பள்ளி பை கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு. ஒவ்வொரு வருடமும் மாணவர்களுக்கு இலவச காலேந்திகள் மற்றும் பள்ளி பைகள் வழங்கப்படுவது. வழக்கம். அந்த வகையில், 2023-24ம் ஆண்டிற்கு பள்ளி மாணவர்களுக்கு காலேந்திகள் மற்றும் பள்ளி பை கொள்முதல் செய்ய தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.
பள்ளிகளிலேயே தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதென தென்காசியில் பள்ளி சிறார்கள் கூறுவது அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, பிறப்பினால் மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள். மனிதர்களில் உயர்வு, தாழ்வு கிடையாது. “சாதி இரண்டொழிய வேறில்லை” என்றார் ஒளவை பிராட்டியார். “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடினார் மகாகவி பாரதியார். இப்படி சாதிக்கு எதிராக போராடியவர்கள் வாழ்ந்த தமிழ் மண்ணில், தீண்டாமை சட்டப்படி ஒழிக்கப்பட்டும், ஆங்காங்கே தலைகாட்டுவது மிகவும் […]
பள்ளிகளில் மாணவர்கள் கம்மல், செயின், காப்பு, கைகளில் கயிறு போன்றவற்றை அணிய தடை விதித்து சமூக பாதுகாப்பு நலத்துறை உத்தரவு. தமிழகத்தில் சமீப நாட்களாக பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் அதிகரித்து வருகிறது. தங்களது சாதியை அடையாளப்படுத்தும் கயிறுகளை கையில் அணிந்து கொண்டு பல ஜாதி குழுக்களாக பிரிந்து உணவு இடைவெளியின்போதும், விளையாட்டு நேரங்களிலும் மோதலில் ஈடுபட்டுவது வழக்கமாகி வந்தது. இந்த நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சமூக பாதுகாப்புத்துறை சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளத. அதன்படி ஜாதியை […]
காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் தொடங்க ஏற்பாடு 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சுய உதவி குழுக்கள் மூலமாக சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இந்த […]
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் முக கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 19 […]
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, க கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இது குறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளி வளாகத்திற்குள் நூறு விழுக்காடு கொரோனா தடுப்பு […]
டிஜிபி சைலேந்திர பாபு ஆசிரியர்கள் நமது ஆதரவாளர்கள். கடவுளுக்கு மேலான ஆசிரியர்களிடமா வன்முறை நடத்துவது? என கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளி ஆசிரியர்கள் மீது, மாணவர்கள் தாக்குதல் நடத்துவது குறித்து டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பள்ளிக்கூடம் தான் நமது வாழ்வாதாரம், ஆசிரியர்கள் நமது ஆதரவாளர்கள். கடவுளுக்கு மேலான ஆசிரியர்களிடமா வன்முறை நடத்துவது? என கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்களின் சொத்துக்களும், ஆதாரங்களும் பள்ளியும், ஆசிரியர்களும் தான். ஒரு சிந்தனையாளனாக, ஆற்றமிக்கவனாக தயாராக […]
புனேயில் 32.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 12 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது முடிக்கப்பட்டுள்ள 12 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11.30 மணிக்கு புனே கார்வாரே மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார். மேலும், டிக்கெட் எடுத்துக்கொண்டு மெட்ரோ ரயிலில் பள்ளி குழந்தைகள் மற்றும் அதிகாரிகளுடன் பயணம் செய்தார்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களுடன் 5 முட்டைகளையும் சேர்த்து வழங்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பரவல் காரணமாக அடைக்கப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் […]
ஒக்கேனக்கல் செல்லும் வழியில் காரை நிறுத்தி பள்ளி மாணவர்களை சந்தித்து பேசிய முதல்வர். தமிழக முதல்வர் மு.க. தருமபுரியில் புதிய கட்டிடங்களை திறந்து வாய்த்த நிலையில், ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக ஒக்கேனக்கல்லுக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, பாதி வழியில், சோகத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் முன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நின்றுக் கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த முதல்வர் உடனடியாக காரில் இருந்து இறங்கி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.அப்போது பள்ளியின் செயல்பாடுகள் […]
தலைவர்களின் படங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பொருட்களில் அச்சிடுவது நிறுத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி படங்கள் அச்சிடப்பட்ட புத்தகப்பைகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் ஆகியவை கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அவற்றை விநியோகிக்க வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாகவும், ஆட்சி மாற்றத்திற்கு பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, ஏற்கனவே […]