பள்ளி விபத்து – பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு..!
நெல்லை சாஃப்டர் பள்ளியில், சம்பவம் நடத்த இடத்திற்கு நேரில் சென்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, நெல்லை சாஃப்டர் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், […]