தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடரும் மழை பெய்து வருகிறது. அதன்படி அதிகாலை முதலே கிண்டி, அடையாறு, வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் தொடர்மழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி, தொடர்மழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம்,திருவண்ணாமலை திருவாரூர் […]
பெங்களூருவில் செயல்பட்டு முக்கிய சுமார் 15 பள்ளிகளில் இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இமெயில் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டலானது கிடைக்கப்பெற்றது. இதனை அடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், முதற்கட்டமாக அனைத்து பள்ளி மாணவர்களையும் பள்ளிகளில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, தற்போது குறிப்பிட்ட பள்ளிகளில் வெடிகுண்டு சோதனையாளார்கள் பள்ளிகளில் அனைத்து இடங்களிலும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 15 தனியார் பள்ளிகளில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் […]
கடந்த 9-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய இன்று சென்னையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையின் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறைகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது இதனை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 9-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய இன்று சென்னையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை […]
சென்னையில் இன்று பள்ளிகளுக்கு முழு வேலை நாளாக சென்னை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு. சென்னையில் இன்று பள்ளிகளுக்கு முழு வேலை நாள் என சென்னை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தொடர் மழையால் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் இன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பாட வேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இன்று ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு […]
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்க,போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படவுள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக, அரவிந்தன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அனைத்து பள்ளிகளிலும் போதைப்பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்படும்.அதன்படி,பள்ளி ஆசிரியர்,மாணவர்,பெற்றோரை கொண்டு ஒரு கண்காணிப்பு குழு அமைத்து,தொடர்ச்சியாக கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளது.மேலும்,மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக இருக்கிறார்களா? என்ற அறிகுறிகளை கண்டறியும் ஒரு முயற்சியை முன்னெடுக்கிறோம். அதன்பின்னர்,அவ்வாறு உள்ள மாணவர்களுக்கு […]
நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில்,பல்வேறு மாநிலங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டி வெப்பம் அதிகரித்துள்ளது.இதனால்,வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில்,மாநிலத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் கற்பிக்கும் நேரத்தை மாற்ற ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி,ஒடிசா அரசின் பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி,இன்று முதல் பள்ளிகளில் கற்பித்தல் நேரத்திற்கான புதிய நேரம் காலை 6 மணி முதல் 9 மணி […]
தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.அந்த வகையில்,10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிப்பு பணிகளுக்கு 38 மாவட்டங்களுக்கும் தனித்தனி அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து,10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால்டிக்கெட்டுகளும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் சமீபத்தில் வெளியிட்டது.மேலும்,தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுக்கு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி,செய்முறைத்தேர்வுக்கான […]
சென்னை:தமிழகத்தின் சில மாவட்டங்களில் ரூ.23.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிகள் மற்றும் பள்ளிக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார். தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த 23 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை தலைமைச்செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 23 கோடியே 78 லட்சத்து […]
புதுச்சேரியில் நாளை 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கவிருந்த நிலையில், அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று தற்பொழுது குறைந்துள்ளது. இதனை அடுத்து நவம்பர் 8 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் […]
அக்டோபர் 4 முதல் மகாராஷ்டிராவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4 முதல் மகாராஷ்டிரா முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது. கிராமப்புறங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார். மேலும், 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான நேரடி வகுப்புகள் நகர்ப்புறங்களில் மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் […]
அக்டோபரில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதிலும் கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடுமையான கொரோனா தடுப்பு நடவடிக்கைளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் […]
வருகின்ற செப்டம்பர் 6 ஆம் தேதி வரை உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளிகளை திறப்பதற்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தற்பொழுது குறைந்துள்ளது. எனவே, பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக […]
தமிழகத்தில் இன்று முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்படுகிறது. கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரும் வரும்15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நடப்பாட்டிற்கான வகுப்புகள் நேரடியாக நடைபெறாமல் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு ஆன்லைன் […]
பள்ளிகள் திறக்கப்படுவதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் பயப்பட வேண்டாம் எனவும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், செப்டம்பர் […]
குஜராத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் 6-8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை […]
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, ஆந்திரா மற்றும் அசாமில் நாளை மறுநாள்(செப்.,21) பள்ளிகளை திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், 4காம் கட்ட தளர்வுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதில் நாளை மறுநாள் முதல், பள்ளிகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. என்றாலும் மாநில அரசுகள், இது குறித்து முடிவு எடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் பள்ளிகளை திறக்க, அனுமதி அளித்திருந்தாலும், சில கட்டுப்பாடுகளையும் உடன் விதித்துள்ளது. அதில் மாணவர்கள் மற்றும் […]
தமிழகத்தில் பள்ளிகள் எப்பொழுது திறக்கும் மற்றும் திறக்கும் தேதி குறித்து மத்திய அரசு தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசின் கேள்விக்கு பதிலளித்து தமிழக அரசு கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை;இது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கவும், முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் இன்னும் துவங்கப்பட வில்லை என்றும் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே பாடம் படிக்கின்ற வகையில் ‘வீடியோ’ மூலமாக பாடங்கள் […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அப்பகுதியை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பட்டின் கீழ் கொண்டுவந்தது. இந்த நடவடிக்கையின் காரணமாக பாதுகாப்பு கருதி அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.மேலும் அங்கும், இணையதளம் உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. மேலும், ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டுவந்த அனைத்து பள்ளிகளும் […]