சமீபகாலமாக கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில்,பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிட்டியை உடனடியாக அமைக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும்,பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் எனவும் யுஜிசி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக,அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பாலின அடிப்படையிலான வன்முறை பிரச்சினையை கையாள்வதற்கு உயர்மட்ட கமிட்டியை […]
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப் படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிப்பு விடுத்துள்ளது. மேலும்,பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம்,முன் அனுமதி பெறாமல் தொலைதூரக் கல்வி,ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து பெரியார் பல்கலைக்கழகத்திடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர், உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு யுஜிசி பரிந்துரைத்துள்ளது.
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு ஏப்ரல் 30 முதல் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டன.இதனையடுத்து,யுஜிசி நெட் தேர்வுக்கு மே 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை முன்னதாக தெரிவித்திருந்தது.அதன்படி, https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து,நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்,அதன்பின்னர் மே 30 ஆம் […]
நடப்பு ஆண்டு முதல் முதுகலை படிப்புகளுக்கான பொதுவான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை (CUET) அறிமுகப்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு (UGC) முடிவு செய்திருந்தது. இந்நிலையில்,முதுநிலைப் பட்டதாரி சேர்க்கைக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET-PG) வருகின்ற ஜூலை 2022 கடைசி வாரத்தில் நடைபெறும் என்று பல்கலைக் கழக மானியக்குழு (UGC) தலைவர் எம் ஜகதேஷ் குமார் அறிவித்துள்ளார். மேலும்,இத்தேர்வுக்கு தேசிய தேர்வு மையத்தின் அதிகாரப்பூர்வ https://nta.ac.in/ இணையதள பக்கத்தில் இன்று முதல் வருகின்ற ஜூன் 18 வரை […]
கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்ததும் 6 மாதங்களுக்குள் அவர்களுக்கு பட்டங்களை தரவேண்டும் என யுஜிசி உத்தரவு. பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.தாமதமாக பட்டம் வழங்குவதாக மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் யுஜிசி இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும்,மாணவர்களுக்கு 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்காத பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது.பட்டங்களை தாமதமாக வழங்குவது,மாணவர்களின் வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனக் […]