Election2024: ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாளி சின்னம் ஒதுக்கீடு. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு பணி நடைபெற்று வருகிறது. சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி, சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, முதலில் பதிவு […]