கோவை காந்திபுரத்தில், 100 அடி சாலையில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 27-ஆம் தேதி இரவு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. கோவையில் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் இந்த சாலையில் பல்வேறு பிரபலமான பெரிய கடைகள் முதல் பல்வேறு சிறிய கடைகள் வரையில் இயங்கி வருகின்றன. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இந்த பகுதியில் இயங்கி வரும் நகைக்கடையில் இந்த கொள்ளை சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளையை மர்ம கும்பல் நகைக்கடை சுவற்றை […]
உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மூவர் 258 ஆமைக்குட்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த ரவீந்திர குமார், சவுரப் காஷ்யப், அர்மான் அகமது ஆகிய 3 பேர் நேற்று மாலை 3 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். காரணம் அவர்கள் மூவரும் 258 ஆமைக்குட்டிகளை வைத்திருந்துள்ளனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த சில மீனவர்களுக்கு பணம் கொடுத்து ஆமைகளை பிடிக்கச் சொல்லி, அவற்றைப் பிற மாநிலங்களில் இவர்கள் அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்துள்ளது. எனவே, […]
உலகளவில் அதிவிரைவாக பரவி வரும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்தியாவில் இந்த வைரஸால் 657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் நேற்று ஓரே நாளில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இவ்வாறு விரைவாக பரவி வரும் கொரோனாவிடம் இருந்து மக்களை பாதுகாக்கவும் ,பரவலை தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை கடுமையாக எடுத்தும் அதனை செயல்படுத்தியும் வருகிறது.இந்தியா முழுவதும் ஊரடங்கு […]
அழிந்து வரும் உயிரினங்களை வேட்டையாட இந்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இதையும் மீறிபல்வேறு கடத்தல் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த கடத்தல்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்கி வருகிறது.இந்நிலையில் அயல்நாடுகளுக்கு கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் நாகையில் பதுக்கி வைத்திருப்பதாக இராமநாதபுரம் மாவட்ட வனஅலுவலருக்கு தகவல் வந்தது. இதையடுத்து வனசரகர் அயூப்கான் தலைமையிலான குழுவினர் மற்றும் காவல்துறையினர் நாகை அக்கரைபேட்டை பகுதியில் நேற்று திடீரென அதிரடி ஆய்வு நடத்தினர். அதில் அக்கரைப்பேட்டை மாரியம்மன் கோயில் அருகே […]