Election2024: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை. நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா உள்ளிட்டவை தடுக்கும் வகையில் தேர்தல் பிறகும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பேருந்து நிலையில், சாலைகள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவரது வாகனங்களும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் […]
Tourists: வடமாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினரிடம் 69,400 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இதனால், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு அதிக பணம் எடுத்து செல்பவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. […]
அரசு மருத்துவமனைகளில் செயல்பாடுகளை கண்காணிக்க பறக்கும் படை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அரசு மருத்துவமனையில் அண்மையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, தவறான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் அரசு மருத்துவமனைகள் சிகிச்சை குறித்த பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டன. இந்நிலையில, சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து புதிய உத்தரவை தமிழக சுகாதாரத்துறைக்கு பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் பறக்கும் படையை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. ஒரு மாநகராட்சி ஒரு […]
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை அமைத்து கண்காணிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை அமைத்து கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களில் ஒரு செயற் குற்றவியல் நீதிபதி 2 அல்லது 3 காவலர்கள் கொண்ட பறக்கும் படைகளை அமைக்க வேண்டும் என்றும் 24 மணிநேரமும் பறக்கும் படை […]
அரசு பேருந்தில் அனாதையாக கிடந்த ரூ.3.47 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான வரித்துறை சோதனை […]