நாடு முழுவதும் 10 நகரங்களில் நடக்க உள்ள இந்த சோதனையில் 920 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான 2 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவோவேக்ஸ் தடுப்பூசியின் இரண்டாவது, மூன்றாவது கட்டம் மருத்துவ பரிசோதனையில் தன்னார்வலர்களை நியமிப்பது நேற்று டெல்லி ஹம்டார்ட் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கியது. அமெரிக்காவில் நோவோவேக்ஸ் நிறுவனம், குழந்தைகளுக்கான தடுப்பூசியை நோவோவேக்ஸ் என்ற பெயரில் உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் […]
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தமிழக அரசு:முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் நேற்று முதல்வர் முகாம் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, பணியாளர்களுக்கு பரிசோதனை நடந்தது.இந்த பரிசோதனையில் முதல்வர் உள்பட வேறு யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டணம் நாடு முழுவதும் ஒன்றுப்போல் இருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயாளிகளின் நலன் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து இவ்வழக்கினை பதிவு செய்து விசாரித்து வந்தது.அவ்வாறு வழக்கின் விசாரணையானது நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல், எம்.ஆர். ஷா அமர்வுமுன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சில மாதங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டணம் ரூ.2,200 ஆகவும் ,மேலும் சில மாநிலங்களில் ரூ.4,500 ஆகவும் […]
சீனாவில் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே ஐக்கிய அமெரிக்காவிலும் பரவ தொடங்கியது. அதன் பரவல் காட்டுத்தீயைப் போல வேகமாக பரவி அமெரிக்க மக்களை கொத்துக்கொத்தாக கொல்லத் தொடங்கியது. அப்போது அந்நாட்டு மக்களிடம் கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் பற்றி அமெரிக்கர்கள் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும், எனினும் அனைத்து அமெரிக்கர்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், நானும் உடல் பரிசோதனை செய்து […]