சட்டப்பேரவையில் 4-வது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்று காலை 10 மணிக்கு தமிழக அரசின் 2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது” 2022-23-ஆம் நிதியாண்டில் பயிர் கடனாக 13,442 கோடி ரூபாய் 17 லட்சத்து 44 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2023 -24 நிதியாண்டில் 16,500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 13 ஆயிரத்து 600 கோடி […]
கரூர் குளித்தலையில் பயிர்க்கடன் வாங்காத 244 விவசாயிகளுக்கு கடன் பெற்றதாக தகவல் சென்றுள்ளது. மேலும், இறந்தவர் ஒருவரும் கடன் வாங்கியதாக தவறுதலாக பதியப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை துணை பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, பயிர்க்கடன் பெறாத 244 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் பெற்றதாகவும், அதற்கான விசாரணைக்கு நேரில் வர வேண்டும் எனவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மன்னில் மேலும் ஒரு குளறுபடி என்னவென்றால், திருச்சி மாவட்டம் போதவூரை சேர்ந்த தவசு என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டே உயிரிழந்துவிட்டார். ஆனால், […]
நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் தாக்கல் செய்து வருகிறார். அதில், சுய உதவிக்குழு, விவசாய பயிர்க்கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைப்போல வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார்.
ஜூலை 31 வரை 98,036 விவசாயிகளுக்கு ரூ.763 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல். சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில், 2021-22 ஆம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக பயிர்க்கடன் வழங்க ரூ.11,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 வரை 98,036 விவசாயிகளுக்கு ரூ.763 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில், மக்கள் எளிதில் சென்று வரமுடியாத […]