பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அறிவுறுத்தலை மீறி, பேருந்துகளில் தங்களது மொபைலில் பாட்டு கேட்பவர்களை தாராளமாக கீழே இறக்கி விடலாம். கர்நாடகா : பொதுவாகவே பயணிகள் பேருந்தில் பயணிக்கும் போது பேருந்துகளில் பாடலை இயக்குவது வழக்கம். ஆனால் சில சமயங்களில் பேருந்துகளில் பாடல்கள் இயக்கப்படாத போது, சிலர் பொழுதுபோக்கிற்காக தங்களது மொபைலில் பாடல்களை போட்டு கேட்டுக்கொண்டு வருவதுண்டு. ஆனால், இந்த செயல் அருகில் இருப்பவர்களை எரிச்சலடைய செய்கிறது. அவ்வாறு தொந்தரவுக்கு உள்ளான நபர் ஒருவர், கர்நாடக மாநில […]
சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில் சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்த போது, சக்கரம் கழன்று ஓடியுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில் சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது பேருந்தின் முன்பக்க சக்கரம் திடீரென, கழன்று தனியாக உருண்டோடியுள்ளது. இதனையடுத்து, சக்கரம் கழன்று ஓடியதை அறிந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால், நல்வாய்ப்பாக எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. பயணிகளும் உயிர்தப்பினர். ஆனால், உருண்டோடிய சக்கரத்தால், சாலையோரம் நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
செங்கல்பட்டு அருகே அரசு பேருந்துக்கு சுங்க கட்டணம் கேட்ட ஊழியர்கள் ஆத்திரத்தில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பயணிகளால் பரபரப்பு சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்துக்கு செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் என்ற சுங்கச்சாவடியில் கட்டணம் வழங்குமாறு கேட்டதால், பேருந்து ஓட்டுநருக்கும் கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதமானது முற்றி அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அரசுப் பேருந்தை சுங்கச்சாவடியின் குறுக்கே நிறுத்தி விட்டார் இதனால் […]