ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர் அவுரங்சீப். காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தை சேர்ந்தவரான அவுரங்சீப் பல பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அம்மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்பின் தளபதி சமீர் டைகர் என்பவன், ராணுவ என்கவுண்டர் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த என்கவுன்டரை நடத்தியவர்களில் கடத்தப்பட்ட்ட அவுரங்கசீப்பும் ஒருவர். விடுமுறைக்காக வீட்டிற்கு சென்ற இவரை நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் […]