தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநரை கூடுதல் பொறுப்பு வழங்கபட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மத்திய சில மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில், தமிழக ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனவும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.
வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் கே.சிவன், நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும், பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் தமிழக கவர்னர் […]