புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வெளியே வந்த 25 அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி அதிமுக சார்பில் இன்று பந்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னதாக புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வெளியே வந்த 25 அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற இருந்த பந்த் ஒத்திவைக்கப்படுவதாக பாஜக அறிவித்துள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, திமுக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து பாஜக சார்பில் அக்டோபர் 31ஆம் தேதி பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பந்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதில் பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பு பாஜக பந்திற்கு யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. அந்த பாஜக செயற்குழு உறுப்பினர் அறிவித்த பந்திற்கு […]
பாஜக அறிவித்துள்ள இந்த பந்த் போராட்டமானது கோவை வியாபாரிகளையும் ,கோவை மக்களையும் வெகுவாக பாதிக்கும். – தமிழ்நாடு வணிகர் சங்க கோவை மண்டல தலைவர் கருத்து. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கார் வெடிப்பு தொடர்பாகவும், அதற்கான ஆளும் திமுக அரசு நடவடிக்கை குறித்து, திமுக அரசை கண்டித்தும் பாஜக சார்பில் வரும் 31ஆம் தேதி கோவையில் பந்த் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பந்த் போராட்டம் குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க கோவை மண்டல தலைவர் […]
பந்த் என்பது போராட்ட வழிமுறைகளில் ஒன்று. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஆட்சியின் மீதான எதிர்ப்பை தெரிவிக்கவும் நடத்துவது தான் பந்த். – தமிழிசை சவுந்தரராஜன். கோவை கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆளும் திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜக சார்பில் வரும் 31ஆம் தேதி கோவை மாநகரில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் பாஜக தமிழக தலைவரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான […]