தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும்,முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளருமான நாகசாமி அவர்கள் உயிரிழந்துள்ள நிலையில்,அவரது மறைவு தனக்கு வேதனையளிப்பதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும்,முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளருமான நாகசாமி அவர்கள்,உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.இதனைத் தொடர்ந்து,அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில்,தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் நாகசுவாமியின் முன்மாதிரியான பங்களிப்பை […]