ஊடகவியலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் வருத்தம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன் என திருமாவளவன் பேட்டி. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்கள் பேட்டியளிக்க சென்ற போது, என்ன மரத்துமேல குரங்கு தாவுற மாதிரி எல்லாரும் சுத்தி, சுத்தி வாறீங்க. ஊருல நாயி, பேயி சாராயம் விற்கிறவன் சொல்றதெல்லாம் கேட்பீங்க சொல்ல முடியாது என தெரிவித்து இருந்தார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள்,’தமிழ்நாடு பாஜக தலைவரின் பேட்டி அதிர்ச்சியளிக்கிறது. ஊடகவியலாளர்கள் நம்மை கேள்வி […]
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்தின் போது உதவி செய்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ட்வீட். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், விபத்து […]
சென்னை:தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு,இன்றைய நாள் துணிவுடன் அறம் காக்க போராடும் பத்திரிகையாளர்களைப் போற்றும் நாளாகும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டின் நான்காவது தூண் என ஊடகங்கள் அழைக்கப்படும் நிலையில்,சட்டப்பூர்வ மற்றும் அரை-நீதித்துறை நிறுவனமான பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவை அங்கீகரித்து கவுரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி “தேசிய பத்திரிகை தினம்” அனுசரிக்கப்படுகிறது.இந்த நாள் இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிகை இருப்பதைக் குறிக்கிறது. இந்நிலையில்,நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் […]
நான் பேசிய வார்த்தை தரக்குறைவான வார்த்தை இல்லை என்பதற்கு விக்கிப்பீடியாவில் விளக்கம் உள்ளது பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக செய்தியாளர் சந்திப்பின்போது, பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியுள்ளார். இதனையடுத்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் இவருக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், செய்தியாளர்களுக்கு எதிராக […]
பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் செய்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும். பணிகாலத்தின் போது இயற்கை எய்தும் பத்திரிக்கையாளர் குடும்ப உதவித்தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்தார். மேலும், சமூக மேம்பாடு/விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்கு பங்காற்றி வரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ‘கலைஞர் எழுதுகோல் விருது’ வழங்கப்படும். அத்துடன் ரூ.5 லட்சமும் […]