சௌமியா விஸ்நாதன் (25 வயது) என்பவர் பிரபல ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா டுடேவில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று காலை 3:30 மணியளவில் சௌமியா தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சில மர்ம நபர்கள் சௌமியாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். […]
பத்திரிக்கையாளர் ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கொடை, பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு. அமைச்சர் சாமிநாதன் அவர்கள் சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்திற்கு மயிலாடுதுறையில் ரூ.3 கோடியில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும். பத்திரிக்கையாளர் ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கொடை, பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும், பணிக்கொடை, பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து, ரூ.4 […]
தமிழகத்தில் பத்திரிக்கையாளர் குடும்ப நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், அதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. இதுகுறித்த அரசாணையில், தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகைத் துறையினர் நலன் கருதி, பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பிழை திருத்துபவர்கள் ஆகியோர் பணியிலிருக்கும் போது இயற்கை எய்தினால் அவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, குடும்ப உதவி நிதியாக ரூ.25.000, ரூ.40,000 ரூ.50,000,ரூ.2,00.000 என வழங்கப்பட்டு ஆணைகள் […]
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும்,மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும்,மூத்த பத்திரிகையாளருமான சந்தன் மித்ரா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார். இவரது மறைவுக்கு, மாநிலங்களவை எம்பி ஸ்வபன் தாஸ்குப்தா போன்ற தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடி அவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஸ்ரீ சந்தன் மித்ரா ஜி புத்திசாலித்தனம் மற்றும் நுண்ணறிவு கொண்டவர். இவர், அரசியல் […]