சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்து உயர்கல்வி முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தேவைக்கு அதிகமாக கணினிகளை கொள்முதல் செய்து நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது புகார் எழுந்தது. அதாவது, தனது துறையான கணினி அறிவியல் துறைக்கு ஒதுக்கிய நிதியை, விதிகளை மீறி தவறாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி, ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாட திட்டங்களில் பெரும் முறைகேட்டில் ஈடுபட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் […]