பதவிகாலம் முடிந்தும் சின்னம் பயன்பாடுத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பதவிக்காலம் முடிந்த பின்பும் எம்பிக்கள், அமைச்சர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் அரசின் கடைநிலை ஊழியர்கள் கூட சின்னங்களை பயன்படுத்துவதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் அனைவரும் சின்னத்தை பயன்படுத்தினால் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் எப்படி அந்த வாகனத்தை நிறுத்தி விசாரிக்க முடியும் எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.