சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் சச்சின் குமார் என்ற ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த தற்கொலைக்கு பேராசிரியர் ஆசிஷ் சென் தான் காரணம் என மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற காவல்துறை […]
கன்னியாக்குமரி மாவட்டத்தில் கண்னாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை பியட்றிஸ் தங்கம்,பள்ளி மாணவர்களை மதமாற்றம் செய்ய முயன்றதாக ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து,சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி,ஆசிரியை பியட்றிஸ் தங்கத்திடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில்,மதமாற்ற புகாரில் சிக்கிய தையல் ஆசிரியயை பியட்றிஸ் தங்கம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். […]
புதுக்கோட்டை:கீரனூர் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் முறைக்கேட்டில் ஈடுப்பட்டதாக எழுந்த புகாரில் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூ.1.8 கோடி நகைக்கடன் வழங்கி முறைகேட்டில் ஈடுப்பட்டதாக கூறி வங்கி செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகிய இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்கள் இருவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் வகுப்பறையில் நடனமாடிய 5 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா எனும் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் வகுப்பறையில் மாணவர்கள் இல்லாத நேரத்தில் நடனமாடி அதை வீடியோவாக வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். பின், நடனமாடிய ஐந்து ஆசிரியர்களை விசாரித்து, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்த […]
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் துப்பாக்கியுடன் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெரும்பாலும் தற்பொழுது அரசு பணிகளில் இருக்கக்கூடிய ஊழியர்கள் முதல் சாதாரண கூலித் தொழில் செய்யக்கூடிய நபர்கள் வரை அனைவருமே சமூக வலைதளங்களில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அரசு பணிகளை செய்யக்கூடிய ஊழியர்கள் சில சமயங்களில் இதனால் சிக்கலில் மாட்டி விடுகின்றனர். தற்பொழுதும் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பெண் போலீஸ் […]