திருச்சியில் பிரபலமான நகைக்கடையாக செயல்பட்டு வந்தது பிரணவ் ஜுவல்லரி. இந்த நகைக்கடையின் கவர்ச்சிகரமான விளம்பரத்தால் மக்கள் ஈர்க்கப்பட்டனர். திருச்சியில் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இந்த நகைக்கடையில் கிளைகள் தொடங்கப்பட்டது. பழைய நகைகளை தங்களிடம் கொடுத்து, ஒரு வருடத்திற்கு பின், எந்த வித செய்கூலி, சேதாரமும் இல்லாமல், பழைய நகையின் எடைக்கு சமமாக புதிய நகைகளை வாங்கி கொள்ளலாம் என விளம்பரப்படுத்தினர். இந்த விளம்பரத்தை நம்பிய பொதுமக்கள் பலர் பிரணவ் ஜுவல்லரியின் பல்வேறு கிளைகளில் பணத்தை கட்டியது மட்டுமல்லாமல், […]