திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் தீண்டாமை சுவர் தகர்க்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே தேக்காமூரில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலையை மட்டுமே தங்களது தொழிலாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு திரௌபதி அம்மன் கோயில் அருகே இருந்த அரசு புறம்போக்கு நிலத்தில் தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டது. இந்த சுவர் மாற்று சமூகத்தினரால் கட்டப்பட்டுள்ளது. இந்த சுவரால் பட்டியலின மக்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு […]
விருதுநகர் அரசு விருந்தினர் மாளிகையில் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த நரிக்குறவ மக்கள். நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் இனத்தை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுப்பட்டிருந்த சமுதாயங்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது குறித்து […]
நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்கார சமுதாயத்தைப் பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் என்பது உலகறிந்த உண்மை என கே.எஸ்.அழகிரி ட்வீட். தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுப்பட்டிருந்த சமுதாயங்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2013 ஆம் ஆண்டு […]
மக்கள் தொகை கணக்கெடுப்பு சமுதாய ரீதியாக எடுக்கப்பட்டு, அதனடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியை சேர்ந்த காமராஜ் என்ற சின்னதுரை மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் மூன்று லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தற்போது மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் நகராட்சியாக மாற்றப்பட்டது. மானாமதுரை நகராட்சியில் பட்டியலின மக்கள் 5,760 பேர் உள்ளனர். ஆனால், […]