சென்னை மாநகராட்சிக்கான 2024–25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ரிப்பன் மாளிகையில் இன்று தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடைபெற்றது. அப்போது, 82 அறிவிப்புகளை கொண்ட சென்னை மாநகராட்சியின் 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநகராட்சி மேயர் பிரியா தாக்கல் செய்தார். அதில் கல்வி, பெண்கள், தொழில் மற்றும் மருத்துவ சேவைகள் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சியின் 2024–25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். கூவத்தூர் […]
தமிழ்நாடு அரசின் 2024-25ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்முறையாக நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதன்பின் நேற்று தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நான்காவது முறையாக தாக்கல் செய்து வைத்தார். இதனிடையே, சென்னை மாநகராட்சி 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் கடந்த 9ம் தேதி சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற நிலையில், இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், […]
சென்னை மாநகராட்சி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் கடந்த 9-ம் தேதி சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. அப்போது இந்த பட்ஜெட் தயாரிப்பதற்கு துறை சார்ந்த திட்டங்கள் முன்மொழியப்பட்டன. இந்நிலையில், இன்று 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்கிறார். சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டம் தொடங்கியதும் மேயர் பிரியா பட்ஜெட் அறிவிப்புகளை […]
தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 13 மற்றும் 14-ம் தேதிகளில் விவாதம் நடைபெற்றது. கடந்த 15 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிலுரையாற்றினார். இதைத்தொடர்ந்து இன்று சட்டசபையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் தரமான போக்குவரத்து சேவைகளை வழங்கிட புதிய பேருந்துகளை வாங்க வேண்டிய […]
சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் சென்னை சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1,517 கோடி ரூபாய் செலவில் நெமிலி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மூலம் 9 லட்சம் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். 150 மில்லியன் லிட்டர் கொள்ளளவில் இந்த குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட […]
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திட்டம் குறித்து அறிவித்தார். அதில் “தரமான சாலை வசதிகளை கடைக்கோடி கிராம மக்களும் எளிதில் பெற்று பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல்வர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு 2024- 2025 ஆம் ஆண்டில் 2000 கிலோமீட்டர் சாலை மேம்பாட்டு பணிகள் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களும் அடிப்படை வசதிகளை கொண்டுதன்னிறைவு […]
கடந்த வாரம் பிப்ரவரி 12ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், இன்று தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். தமிழக நிதிநிலை அறிக்கையில், சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு, அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய தலைப்புகளின் கீழ், […]
சட்டசபையில் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்து வருகிறார். இன்றைய பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து அறிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், நாட்டில் முதல் முறையாக ஊரகபகுதிகளில் ஏழை குடும்பங்கள் வசிக்கும் குடிசைக்கு பதிலாக நிரந்தர வீடுகள் காட்டித் தரப்படும் திட்டம் கடந்த 1975-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2010 ஆம் […]
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில் தமிழ்நாட்டில் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை , திருவண்ணாமலை, தென்காசி, திருப்பூர், கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும். மேலும் தமிழ்நாடு மட்டுமின்றி தமிழ் சமூகத்தின் காலச்சுவடுகளை தேடி கேரளா, ஓடிஸா, ஆந்திரா […]
அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அப்போது பேசிய அவர் தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பில் 7 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி சமூக நீதி கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவம் நோக்கில் மகளிர் நலன், பசுமை வழிப்பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற அம்சங்களில் பட்ஜெட் இருக்கும் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து […]
நடப்பாண்டுக்கான தமிழக அரசின் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்று அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசின் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. TNBudget 2024 Live : தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேரலை நிகழ்வுகள்…. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். இதன்பின் தமிழக அரசின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான […]
கடந்த 12-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் தொடங்கிய நிலையில், இன்று தமிழக அரசின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், தமிழக அரசின் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னராசு முதல் முறையாக தாக்கல் செய்கிறார். இதன்பின் நாளை வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் […]
இந்த ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி கடந்த 12-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. முதல் நாள் ஆளுநர் அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்தார். பின்னர் சபாநாயகர் அப்பாவு தமிழக அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். இதைத்தொடர்ந்து, கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. கடந்த 15 ஆம் […]
கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொட தொடங்கியது. 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யப்பட்டது. 15-வது முறையாக முதல்வர் சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு மாநிலத்தின் பட்ஜெட் செலவினம் ரூ. 3.71 லட்சம் கோடியாக உள்ளது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். 2025 நிதியாண்டில் கர்நாடகாவின் பொருளாதாரம் 6.6% வளர்ச்சி அடையும் என்று அவர் கூறினார். கர்நாடக பட்ஜெட்டில் சில முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன. 2024-25 நிதியாண்டில் பெண்கள் சார்ந்த திட்டங்களுக்கு […]
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “வருகின்ற பிப்ரவரி 12-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் எனவும் தெரிவித்தார். பின்னர் 20 ஆம் தேதி 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முன்பணம் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதேபோல 21 ஆம் தேதி 2023- 24 […]
மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தேர்தல் நெருங்கும் வேளை என்பதால், நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், குறுகிய கால பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.! நிர்மலா சீதாராமன்.! 500 பில்லியன் : குறுகிய கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று அறிகுறி அளித்து தான் நிதியமைச்சர் […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 01 பிப்ரவரி 2024 அன்று பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இது இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு தனது குறுகிய பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை வெறும் 87 நிமிடங்களில் வாசித்தார். இந்திய வரலாற்றிலேயே மிக […]
மோடி அரசு தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். நாடாளுமன்ற பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை 6-வது முறையாக நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த முறை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி முதல் தொடங்க உள்ளது எனவும் இந்த அமர்வு பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறும் என கூறபடுகிறது. ஜனாதிபதி […]
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.நடப்பு ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலக வளாகத்தில் தாக்கல் செய்து வருகிறார். அதன்படி,பேசிய நிதியமைச்சர் கூறியதாவது: “தமிழர் மரபு, பண்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.திமுக ஆட்சிக்கு வந்த பின் நான் தாக்கல் செய்த பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்காரணமாக,வரும் நிதியாண்டில் தமிழக […]
சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18-ஆம் தேதி (நாளை) 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றும் இதுபோன்று வேளாண் பட்ஜெட் மார்ச் 19-ஆம் தேதி (நாளை மறுநாள்) தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்தார். 2-வது பட்ஜெட்: சபாநாயகர் தலைமையில் அன்று அலுவல் ஆய்வுக்குழு கூடி பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பிறகு தாக்கல் செய்யப்படும் 2-வது […]