நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதியா? உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம்!
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், கை நடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம் கொடுத்திருக்கிறார். விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் வதந்தி. மருத்துவர்களின் ஆலோசனைப்படி,விஷால் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். […]