பஞ்சுக்கான 1% நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் விதி 110 கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் பஞ்சுக்கான 1% நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று பஞ்சு மீதான நுழைவு வரி ஒரு சதவிகிதம் ரத்து செய்யப்படுகிறது. இதற்கான சட்டத்திருத்தம் இந்த சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது என தெரிவித்தார்.