நீரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் நீரவ் மோடி தொடர்ந்த அத்தனை வழக்குகளும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி, தனது வியாபாரத்திற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 11,500 கோடி ரூபாய் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பி ஓடிவிட்டார். அதன் பிறகு, 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த […]
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் ஏய்ப்பு செய்த தொழிலதிபர் நீரவ் மோடியை தப்பி ஓடியவராக அறிவித்து, அவரது 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. பொருளாதார குற்றவியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நபர் நடவடிக்கைகளிலிருந்து தப்புவதற்காக வெளிநாட்டுக்குச் சென்றால் தப்பி ஓடியவராக கருதப்படுவார். கடந்த 24ம் தேதி அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ஏய்ப்பு […]
தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயம், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி போன்ற தனிநபர்கள், கம்பெனிகள், எல்எல்பிக்கள் உட்பட 60-க்கும் மேற்பட்ட அமைப்புகள் தங்களது சொத்துகளை விற்க தடைவிதித்துள்ளது. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் நிறுவன சட்டத் தீர்ப்பாயத்துக்கு அளித்த மனுவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கில்லி இந்தியா,கீதாஞ்சலி ஜெம்ஸ்,நக்ஷத்ரா பிராண்ட்ஸ், ஃபயர்ஸ்டார் டயமண்ட், சோலார் எக்ஸ்போர்ட்ஸ், ஸ்டெல்லார் டயமண்ட்ஸ் போன்ற நிறுவனங்களின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைச் சேர்த்து […]