பஞ்சாபில் போதை பொருள் கொடுத்து கடத்தப்பட்ட நபர் 4 பெண்களால் பலாத்காரம் செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம், ஜலந்தரைச் சேர்ந்த நபர் ஒருவர், தனக்கு 4 பெண்கள் போதைப்பொருள் கொடுத்து கடத்தப்பட்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறியுள்ளார். கடந்தத் திங்கள்கிழமை அன்று தோல் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சம்பந்தப்பட்ட நபர் ஜலந்தரின் கபுர்தலா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வெள்ளை நிற காரில் வந்த நான்கு பெண்கள் அவரைத் தடுத்து நிறுத்தி முகவரி ஒன்றை விசாரித்தனர். […]