பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்தலில், பஞ்சாபின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட பகவந்த் மான் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து பகவந்த் மான் கூறுகையில், பகத்சிங்கின் கிராமமான கட்கர்காலனில் நான் முதல்வராக பதவியேற்பேன்; ராஜ்பவனில் அல்ல. பஞ்சாபின் எந்த அரசு அலுவலகங்களிலும் முதல்வரின் புகைப்படங்கள் இருக்காது; பகத் சிங் மற்றும் பாபாசாகேப் […]