பாட்டியாலாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிவசேனா தலைவர் ஹரிஷ் சிங்லா கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் காளியம்மன் கோவில் அருகே இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் நிலவிய நிலையில் தொடக்கத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் சற்று நேரத்தில் கைகலப்பில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக […]