சிவ பெருமான் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும், இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அனைத்தையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவன் மட்டும் நிலையாக இருப்பதாகச் சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய புராணங்களிலும், இந்து தொன்மவியல் கதைகளிலும் மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார். சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள், அன்பாக அருட் பெருஞ் சோதியாக, இன்பமாக மங்களமாக மறைபொருளாக […]