கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வேலூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவரான எல்.முருகன் அவர்கள்,திமுகவின் முரசொலி அலுவலகம் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று கூறியதால் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து,சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எல்.முருகன் மீது திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.இதற்கிடையில்,தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன்,கடந்த ஆண்டு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை,கால்நடை பராமரிப்பு, மீன்வளம் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து,எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் […]