பிரதமர் நரேந்திர மோடி பத்திரிக்கையாளர்களை நேரடியாக அழைத்து சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமா.? என கர்நாடகா முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான் சித்தராமையா சவால் விடுத்துள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடந்த மாதம் 30ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினர். யாத்திரையின் 12வது நாளில் கர்நாடாக வந்தடைந்தார் ராகுல் காந்தி. அவருக்கு போட்டியாக கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட பாஜகவினர் பலர் […]
கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் மீண்டும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
777 சார்லி என்ற படத்தை பார்த்த கர்நாடக முதல்வர் கதறி அழுதார். கன்னட திரை துறையில் முன்னணி நடிகராக வலம் வரும் ரக்ஷித் ஷெட்டி, இயக்குனர் கிரண் ராஜ் இயக்கத்தில் 777 சார்லி என்ற படம் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார். இக்கதையின் முக்கிய அம்சம் என்னவென்றால் ஒரு நாய்க்கும் உறவுகளற்ற இளைஞனுக்கும் இடையே உள்ள உறவை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான நிலையில் […]
‘777 சார்லி’ என்ற கன்னடத் திரைப்படம் கடந்த ஜூன் 10ஆம் தேதி ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஒரு மனிதனுக்கும் அவனது நாய்க்கும் இடையிலான பிணைப்பைக் கொண்டியிருக்கும் இந்த படம் அனைத்து இடங்களிலும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருவதால், பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படம் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இந்நிலையில், ரக்ஷித் ஷெட்டி நடித்த இப்படம் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது பணிகளில் இருந்து ஓய்வு […]
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்து இருந்த நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை கர்நாடக பசவராஜ் பொம்மை அவர்களிடம் அளித்துள்ளார். கடந்த மார்ச் 30-ஆம் தேதி அரசு சிவில் ஒப்பந்ததாரரான சந்தோஷ் பாட்டில் என்பவர் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கு 40% லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சந்தோஷ் பாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். சந்தோஷ் இறப்பதற்கு முன்பாக அவர் எழுதியிருந்த கடிதத்தில் தனது மரணத்திற்கு […]
கர்நாடகா:உலகின் உயரமான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்துள்ளார். கர்நாடகா மாநிலம் துமகூரு அருகே பிதனகெரே கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 161 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார். ராம நவமியையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்காக பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக ஆஞ்சநேயர் சிலையை திறந்து வைத்துள்ளார். ஆஞ்சநேயர் சிலை திறப்பு விழாவுக்கு கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமை தாங்கினார்.மேலும்,இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் […]
கர்நாடகா:161 அடி உயர ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். கர்நாடகா மாநிலம் துமகூரு அருகே பிதனகெரே கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 161 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். ராமநவமியையொட்டி பக்தர்கள் தரிசனத்திற்காக பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக ஆஞ்சநேயர் சிலையை திறந்து வைக்க உள்ளார்.ஆஞ்சநேயர் சிலை திறப்பு விழாவுக்கு கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமை தாங்க உள்ளார். இந்த ஆஞ்சநேயர் சிலையானது […]
கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, டெல்லியில் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதி வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக உறுதியாக உள்ளது. அதேபோல மேகதாதுவில் அணை கட்டவிடாமல் எப்படியும் தடுப்போம் என தமிழக அரசும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. […]
மேகதாது அணைக்கு எதிராக தமிழகம் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அதற்க்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகா பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு. மேகதாது அணை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானத்தை நேற்று முன்மொழிந்தார். இதற்கு அனைவரும் ஒப்புதல் அளிக்கவே சட்டப்பேரவையில் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக சட்டசபையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக […]
மேகதாது அணை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில்,இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானத்தை நேற்று முன்மொழிந்தார்.அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், 1978 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியில் இருந்தபோது மேகதாது குறித்து பேசினார். பின்னர் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, போராடினார்கள். பின் எடப்பாடி பழனிச்சாமி போராடினர். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். என் மகன், பேரன், கொள்ளுப் பேரன் காலம் வரை மேகதாது பிரச்சனை போகுமென […]
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நடந்து 25 நாட்கள் கடந்துவிட்டன. இதுவரை இரு நாடுகளுக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதற்கிடையில், ரஷ்ய-உக்ரைன் போரில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பா ஞானகோதரின் உடல் இன்று காலை இந்தியா வந்தது. நவீன் உயிரிழப்பு: ஹவேரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் என்பவர் மார்ச் 1ஆம் தேதி உக்ரைனின் கார்கிவ் நகரில் உயிரிழந்தார். 21 வயதான நவீன் உக்ரைனில் உள்ள கார்கிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். உணவுக்காக […]
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என ஒரு கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,கர்நாடகாவில் பல மாவட்டங்களில் முஸ்லீம் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என மேலும் சில கல்வி நிறுவனங்கள் தெரிவித்தன. முஸ்லிம் மாணவிகள் போராட்டம்: இதனையடுத்து,ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என […]
கர்நாடகாவில் டிஜே போன்ற எந்த சிறப்பு நிகழ்ச்சியும் இன்றி 50% இருக்கை வசதி கொண்டு கிளப்புகள் மற்றும் உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி நாடு முழுவதும் அதிகரித்து வரும் ஓமைக்ரான் வைரஸை கருத்தில் கொண்டு வரும் புத்தாண்டு பொதுக்கொண்டாட்டத்திற்கு கர்நாடக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, 50% இருக்கைகள் கொண்ட கிளப்புகள் மற்றும் உணவகங்களில் எந்த சிறப்பு நிகழ்ச்சியும் இல்லாமல் கொண்டாட மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொண்டாட்ட இடங்களில் அனைவருக்கும் முழு தடுப்பூசி போடுவது […]
மும்பை-கர்நாடகா பகுதிக்கு ‘கிட்டூர் கர்நாடகா’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் உருவாகி 65 ஆண்டுகள் நிறைவுபெறுவதை ஒட்டி கர்நாடகாவில் நேற்று கர்நாடக ராஜ்யோட்சவா எனும் பெயரில் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள், மும்பை கர்நாடக பகுதிக்கு இன்னும் பழைய பெயரையே வைத்து இருப்பதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. மேலும் அப்பகுதியில் எல்லை பிரச்சனையும் அடிக்கடி ஏற்பட்டு […]
வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கர்நாடகாவில் தினமும் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவை ஒழிப்பதற்கான தீவிரமான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் கொரோனாவை ஒழிக்க அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை […]