திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களில் பலர் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். பக்தர்களின் காணிக்கை தலைமுடி, வாகனங்கள் மூலம் திருப்பதிக்கு கொண்டு சென்று, அங்கு சுத்தம் செய்து, நீளம் மற்றும் நிறத்தின் அடிப்படையில் தரம் பிரித்து, ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று ஆன்லைன் மூலமாக ஏலம் விடப்படுகிறது. அதன்படி நேற்று பக்தர்களின் காணிக்கை தலைமுடி ஏலம் விடப்பட்டது. இதில் 8 ஆயிரத்து […]