பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி, தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்த் என்பவரை அறிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்த மாயாவதி (வயது 67) திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும், வாரிசு அரசியலுக்கு பெயர் போனவர் மாயாவதி. அதன்படி, தனது சகோதரர் ஆனந்த் கடந்த 2019ம் ஆண்டு கட்சியின் துணைத் தலைவராகவும், ஆகாஷ் ஆனந்தை தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்து இருந்தார். பகுஜன் சமாஜ் கட்சிக்கு உ.பி தவிர ராஜஸ்தான் உட்பட […]
பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) நாடாளுமன்ற உறுப்பினர் டேனிஷ் அலி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைமை அறிவித்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) அதன் எம்பி டேனிஷ் அலியை சஸ்பெண்ட் செய்தது அக்கட்சி தலைவர் மாயாவதி நடவடிக்கை எடுத்துள்ளார். அண்மையில் டேனிஷ் அலியை நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், நேற்று பதவி […]
உத்தரப்பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சியுடன் கூட்டணி அமைக்க சுமார் 40தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பகுஜன் சமாஜ் – சமாஜ்வாதிக் கட்சி இணைந்து பா.ஜ.க வேட்பாளர்களை தோற்றகடித்தன. இந்நிலையில் வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் எனக் கூறப்படுகிறது. 2014நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாமிடம் பிடித்த தொகுதிகளை அந்தந்தக் கட்சிக்குப் பிரித்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2014நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் 34தொகுதிகளிலும் […]