Tamil News Today Live : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நீங்கள் நலமா எனும் திட்டத்தை துவங்கி வைக்க உள்ளார். அதே போல பிரதமர் நரேந்திர மோடி இன்று கொல்கத்தாவில் நீருக்கு அடியில் செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பாதையை திறந்து வைக்க உள்ளார். மக்களவை தேர்தல் அரசியல் நகர்வுகள், கூட்டணி நிலவரங்கள், தொகுதி பங்கீடு குறித்தும் பல்வேறு தகவல்களையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை மெரினாவில் புதியதாக கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புனரமைக்கப்பட்ட அண்ணா நினைவிடம் ஆகியவற்றை இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மக்களவை தேர்தல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு நிகழ்வுகள் குறித்த நேரலை நிகழ்வுகளை இதில் காணலாம்…. பிரதமர் மோடியின் தமிழக பயணத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவுடன் மேற்கொண்டு […]