விடியா திமுக அரசு,நடப்பு பருவத்திற்குத் தேவையான உரங்களை முன்னெச்சரிக்கையாக வாங்கி இருப்பு வைத்ததாக தெரியவில்லை என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மாடு கட்டி போரடித்தால்;மாளாது செந்நெல் என்று யானை கட்டி போரடிக்கும் காலம்;ஒன்று தமிழகத்தில் இருந்தது. பண்டைய காலங்களில் வேளாண்மையில் தமிழகம் எவ்வாறு சிறந்து […]