நாகலாந்தில் அமல்படுத்தியுள்ள ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என நாகலாந்து முதல்வர் நெய்பியு ரியோ கூறியுள்ளார். நாகலாந்து மாநிலத்தில் சனிக்கிழமை இரவு தீவிரவாதிகள் என நினைத்து பொதுமக்கள் சென்ற வாகனத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் ராணுவ வீரர் உட்பட இருவர் பலியாகினர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து நாகலாந்து முதல்வர் நெய்பியு […]