போராட்டம் என்ற பெயரில் கிட்டத்தட்ட ஓராண்டாக நெடுஞ்சாலைகளை எப்படி முடக்க முடியும்? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் 300 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் இதற்கு முறையான தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில் நொய்டாவை சேர்ந்த மோனிகா […]