மத்திய அரசின் முடிவுக்கு எதிராக மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் இன்று தமிழக சட்டப் பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின். நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கு,பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமே வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்,மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் […]
உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வு கொண்டுவரும் ஒன்றிய அரசின் முடிவு பிற்போக்குத்தனமான நடவடிக்கை பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம். அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களுக்கும், பொது பல்கலைகழக நுழைவுத் தேர்வினை கட்டாயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வு கொண்டுவரும் ஒன்றிய அரசின் முடிவு பிற்போக்குத்தனமான நடவடிக்கை. இந்த நுழைவுத்தேர்வு மாநில பாடத்திட்ட மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது என்றும், உயர்க்களவு நிறுவன […]
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.அதன்படி,எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைரீதியாக அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். பாமக உறுப்பினர் வலியுறுத்தல்: அந்த வகையில்,பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி பேசுகையில்,யுஜிசியானது மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை நடத்துவதாக அறிவித்துள்ளது.ஆனால்,இதனை தமிழகத்தில் அனுமதிக்ககூடாது என்று வலியுறுத்தியிருந்தார். இனி நுழைவுத்தேர்வு அனுமதிக்கப்பட மாட்டாது: இந்நிலையில்,தமிழகத்தில் இனி நுழைவுத்தேர்வு அனுமதிக்கப்பட மாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் தெரிவித்துள்ளார்.இது […]
மத்திய அரசினால் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் நுழைவுத்தேர்வுகளினால் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய கிராமப்புற மாணவர்களது மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி கனவுகள் கானல் நீராகும் பேராபத்து ஏற்பட்டதாக சீமான் தெரிவித்துள்ளார். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் 2.5 விழுக்காடு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கிட தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]
கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நீட் நுழைவுத்தேர்வு எப்போது நடைபெறும் என்ற தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு வகையானதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதனை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது.இதையடுத்து நீட் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு மத்திய அரசு […]