இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1500ஐ தாண்டியுள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கையும் 50ஐ தொட உள்ளது.இந்நிலையில், இந்த நோய் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்களுக்காக, ஆங்காங்கே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கிருமி நாசினி கொடுத்து மக்களை கைக்கழுவுதலின் அவசியத்தை விளக்குகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் […]