நீர்வளத்துறையில் 235 உதவி பொறியாளர் பணியிட மாற்றம் தமிழக அரசு அதிரடி உத்தரவு. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதில், அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு, பணியிட மாற்றம், புதிய அதிகாரிகளை நியமனம் செய்வது உள்ளிட்ட அதிரடியான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இம்மாதம் தொடக்கத்தில் பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறையில் பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்தும், கூடுதல் பொறுப்பு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், […]
தமிழக அரசின் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவற்றை இரண்டாக பிரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய இரண்டும் தனித் துறைகளாக செயல்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி,நீர்வளத் துறை தொடர்பானவை நீர்வள அமைச்சருக்கும், பொதுப்பணித் துறை தொடர்பானவை பொதுப்பணித் துறை அமைச்சருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: “பொதுப்பணித் துறை மற்றும் நீர்வளத் துறைக்கு இடையே, துறையின் நிர்வாகப் பணிகள் பிரிக்கப்பட வேண்டும் என, […]
தமிழக சட்டமன்றத்தில் முதல் முறையாக நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.அந்த வகையில்,பொதுப் பணித்துறையில் இருந்து நீர்வளத்துறை தனியாக பிரிக்கப்பட்டு,அத்துறையின் அமைச்சராக துரைமுருகன் அவர்கள் நியமிக்கப்பட்டார். அதன்படி,அணைகள்,ஆறுகள்,ஏரி மற்றும் குளங்கள் போன்ற நீர் ஆதாரங்களின் வளத்தை பெருக்கும் பணிகள் நீர்வளத்துறையின் கீழ் வருகின்றன. இந்நிலையில்,முதல்முறையாக நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தமிழக சட்டப் பேரவையில் […]