சென்னையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், புயல் கரையை கடக்க உள்ள நிலையில், சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இன்று இரவு வரை தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகள் 98% நிரம்பி உள்ளது. ஆறு, ஏரிகளின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் […]
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது. அதேபோல், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு இன்று காலை 8 மணி முதல் 3,000 கன அடியாக உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சமீப காலமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதுடன், ஏரிகள், அணைகளும் நிரம்பி வருகிறது. அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு இன்று காலை 8 மணி முதல் 3,000 கன அடியாக உயர்த்தப்படுகிறது. கனமழையால் நீர்வரத்து 6,000 கன […]