கும்பகோணத்தில் மகாமக குளத்தில் வெகுச்சிறப்பாக மாசிமக திருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு புகழ்பெற்ற கும்பகோணம் மகாமக குளத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசி மக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதே போல் இவ்விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகவும் வெகுச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டின் மாசிமகவிழாவை முன்னிட்டு கடந்த பிப்.28ந்தேதி முதல் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் ஆகிய 6 சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. அதே போல் பாணபுரீஸ்வரர், கம்பட்ட […]