கோவை கார் வெடி விபத்தில் கைதான 3 பேருக்கு நீதிமன்ற காவல் டிசம்பர் 27 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து குறித்தான வழக்கினை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் முதலில் முகமது தல்கா , முகமது அசாருதீன் , முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில் , முகமது நவாஸ் இஸ்மாயில் , அப்சர்கான் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் […]
581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாக நீதிமன்றத்தில் கூறிய காவல்துறையினர். உத்திரபிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நெடுஞ்சாலையில் நடத்திய மெகா கஞ்சா வேட்டையில் மதுரா காவல்துறை அதிகாரிகள் 581 கஞ்சாக்கள் கடத்தல் காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். ஷெர்கர் காவல் நிலையத்தில் 386 கிலோ கஞ்சாவும், நெடுஞ்சாலை காவல் நிலையத்தில் […]
சாதி சான்றிதழ் கிடைக்காததால் நீதிமன்ற வளாகத்தில் வேல்முருகன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு மநீம கண்டனம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் படப்பையைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேல்முருகன். நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், 10ம் வகுப்பு படிக்கும் மகனின் கல்விக்காக சாதிச் சான்றிதழ் கோரி 5 ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராடியுள்ளார். மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சாதிச் சான்றிதழுக்காக பலமுறை அலைந்தும் பயனில்லை. மனம் வெறுத்துப்போன வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் […]
பொதுக்குழு கூட்டம் நடத்துவது தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சி தேர்தலில் அடிப்படை […]
கடந்த 2014ஆம் ஆண்டு தனது முன்னாள் காதலியின் கையை பிடித்து இழுத்த குற்றத்திற்காக, அந்த நபருக்கு ஒரு ஆண்டு சிறை தணடனை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு தனது முன்னாள் காதலியை தாக்கிய குற்றத்திற்காகவும், பொது இடத்தில் அவரது கையை பிடித்து இழுத்து அவளது கண்ணியத்தை சீர்குலைத்ததாகவும் எழுந்த புகாரில், மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த நபருக்கு ஓராண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து நீதிபதி, […]
சண்டை மிகவும் பிடித்த சிலர் நீதிமன்ற வாசலிலேயே இருக்க விரும்புகிறார்கள் என உச்சநீதிமன்ற நீதிமதிகள் கூறியுள்ளனர். டெல்லி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருமணமாகி 30 ஆண்டுகாலத்தில் அடிக்கடி பிரச்சனைபட்டு 60 முறைக்கு மேல் வழக்கு தொடர்ந்துள்ள தம்பதிகளை கண்டு வியப்படைந்துள்ளனர். இந்த தம்பதிகள் இருவரும் 11 ஆண்டுகளாக பிரிந்தும் வாழ்ந்து வருகின்றனராம். இந்நிலையில், இது குறித்து பேசிய நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில், சிலருக்கு சண்டையிடுவது மிகவும் பிடிக்கும். எனவே அவர்கள் நீதிமன்ற வாசலிலேயே […]
கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை, கீழமை நீதிமன்றங்களில் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் மூடப்பட்டது .இதனை அடுத்து முழுக்க முழுக்க நீதிமன்றங்களில் விசாரணையானது காணொளி மூலமாக தான் நடைபெற்றது. அதற்குப் பின் ஒரு சில மாதங்கள் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக வேலூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி […]
காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரத்தில், பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் நீதிமன்றத்தில், நூற்றுக்கணக்கான வழக்குகளுக்காக நாள்தோறும் சிறை கைதிகள் ஆஜர்படுத்தப்படுவதுண்டு. இந்நிலையில், போலீஸ் பாதுகாப்புடன், சிறையில் இருந்து கைதி ஒருவர் அழைத்து வரப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நின்றுகொண்டிருந்த போது, அந்த கைது நீதிமன்ற வளாகத்தின் சுவற்றின் மேல் ஏறி குதித்து, தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு […]
பாகிஸ்தானில், கிருஷ்ணர் கோவில் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரிய மனுக்களை நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், முதல் முறையாக பகவான் கிருஷ்ணர்க்கு கோவில் கட்ட சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.மேலும் இதற்காக, 20 ஆயிரம் சதுர அடி நிலத்தை, தலைநகர மேம்பாட்டு ஆணையம் ஆனது ஒதுக்கி இருந்தது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் பிரதமர் இம்ரான் கானின் கூட்டணி கட்சியான, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – குவைட் உட்பட, பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் […]
கூகுள் பே’ பரிவர்த்தனையில் விதிமீற நடப்பதாக எழுந்த புகார் குறித்து நீதிமன்றத்தில் ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது. உரிய அங்கீகாரம் பெறாமல், ‘கூகுள் பே’ செயல்படுவதாக பொதுநல வழக்கு ஒன்றினை நிதி பொருளாதார அறிஞர் அபிஜித் மிஸ்ரா தாக்கல் டெல்லி உயர்நிதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.இம்மனு மீதானவிசாரணை ஆனது டெல்லி நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.என்.படேல், பிரதீக் ஜலான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.கிரி, […]
இந்தியாவில் இருந்துகொண்டு இந்தியாவுக்கே குண்டு வைக்கும் கயவர்களுக்கு தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது.ஹைதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 44 பேர் கொல்லப்பட்டதுடன், 68 பேர் காயமடைந்தனர். 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் குற்றவாளிகள் அனீக் சயீத் மற்றும் இஸ்மாயில் சவுத்திரி ஆகியோருக்கு தூக்குதண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். மற்றொரு […]